ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 250 பேர் பலியாகியதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250க்கும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.
தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து 44 கிமீ (27 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.