இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
மேற்படி குழுவில் 10 பிரதிநிதிகள் உள்ளடங்கியுள்ளதாகவும் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இடம்பெற்றதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் இலங்கை எதிர்பார்த்துள்ள கடன் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நேற்றைய பேச்சுவார்த்தையின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பிரதிநிதிகள் பங்கேற்றிருந்ததாகவும் மேற்படி நிதியத்திடம் இருந்து நான்கு பில்லியன் அமெரிக்கன் டொலர்களை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
சில கட்டங்களாக அதனை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்று நாட்டை வந்தடைந்தத அந்த பிரதிநிதிகள் குழு மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.