Tamil news Sri Lanka

தலைக்கவசத்திற்கு தீ மூட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் வீசிய இளைஞன்


கந்தானையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், நபர் ஒருவர் தலைக்கவசத்திற்கு தீ மூட்டி, அதனை குறித்த எரிபொருள் நிலையத்தை நோக்கி வீசியுள்ளார்.

எனினும், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களும் விரைந்து செயற்பட்டு தலைக்கவசத்தில் இருந்த தீயை அணைத்தனர்.

இதனால், அங்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.



Source link

Related posts

புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது – Trueceylon News (Tamil)

Rohan

BREAKING NEWS :- ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட மற்றுமொரு அதிரடி வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

Rohan

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy