தம்மிக பெரேராவை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 அடிப்படை உரிமை மனுக்களையும் உயர்நீதிமன்றம் இன்று (21) தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவர் பாராளுமன்றம் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்குக்கான தீர்ப்பு வரும் வரை தாம் எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என தம்மிக நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.