கொழும்பு, கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் நகைக்கடை உடைக்கப்பட்டு 1.5 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
சந்தேகநபர் கடையின் இரும்புக் கதவுகளை உடைத்து இரத்தினக் கற்கள் பதித்த தங்க நகைகள் உட்பட பல நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்த காட்சிகள் சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.