Tamil news Sri Lanka

5 துப்பாக்கிகளுடன் ஒருவர் அதிரடி கைது – Trueceylon News (Tamil)


வத்தளை – மாபோல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 5 கைத் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று சோதனை மேற்கொண்ட போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பின்போது, வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட இரட்டைக்குழல் ரகத்தைச் சேர்ந்த 2 துப்பாக்கிகளும், ஒற்றைக் குழல் ரக துப்பாக்கியொன்றும், பொயிட்22 ரகத்தைச் சார்ந்த 2 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், வத்தளை – மாபோல பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளர்.

சந்தேகநபர் இன்று வத்தளை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



Source link

Related posts

அமெரிக்காவை தாக்கியது ஒமிக்ரோன் l முதல் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

Rohan

ஐக்கிய தேசியக் கட்சியே “எதிர்காலத்தை நிர்மாணிக்கும்” l ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

Rohan

ஜனவரி முதல் இதை கட்டாயம் செய்யுமாறு அமைச்சர் விடுத்த அவசர கோரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy