பௌசர் சாரதிகள், தவறான மற்றும் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து வேதனையை வெளிப்படுத்துவதாக லங்கா IOC தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் IOC அறிவித்துள்ளது.
IOC எரிபொருள் பௌசரில் இருந்து காரொன்றுக்கு பெற்றோல் கேன்களை வழங்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகியருந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட அறிவப்பை IOC வெளியிட்டுள்ளது.