இணையவழியில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதால், அப்போதைய காலக்கட்டத்தில் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியினுள் மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.