ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 3 லட்சம் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, 42.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் பத்திரம், மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் கடன் பத்திரம் திறக்கப்படும் பட்சத்தில், இந்த வார இறுதியில் பெட்ரோலை இறக்குமதி செய்ய முடியும் என எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இதன்படி, பெட்ரோல் கொள்வனவுக்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)