Tamil news Sri Lanka

ஒரு நேரத்தில் இத்தனை வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் நிரப்ப முடியும்


எரிபொருள் கொள்கலனொன்றில் 220 வாகனங்களுக்கு போதுமான எரிபொருளை மாத்திரமே விநியோகிக்கப்பட்டு வருகின்றமையினால், அந்த எண்ணிக்கைக்கு மேலதிகமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, வரிசைகளில் காத்திருக்கின்ற அனைவருக்கும் எரிபொருளை விநியோகிக்க முடியாது என்பதனால், எரி;பொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற விதத்தில் நேரத்தை வீண்விரயமாக்க வேண்டாம் என அவர் கூறுகின்றார்.

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு வருகைத் தரும் எரிபொருள் கொள்கலனொன்றில் 6600 லீட்டர் எரிபொருள் மாத்திரமே காணப்படுவதாகவும், அந்த எரிபொருள் தொகையானது 220 வாகனங்களுக்கு மாத்திரமே போதுமானது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக சுமார் 220 வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்க முடியும் என்பதனால், அந்த எண்ணிக்கைக்கு மேலதிகமாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் காத்திருக்க வேண்டாம் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு, ஒரு கொள்கலனின் ஊடாக மாத்திரமே நாள் ஒன்றிற்கு எரிபொருள் விநியோகிக்க முடியும் என்பதுடன், அடுத்த விநியோகம் மறுநாள் விநியோகிக்க முடியும் என அவர் மேலும் கூறுகின்றார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அமைதியின்மை ஏற்படும் பட்சத்தில், அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொள்கலன் அனுப்பி வைக்கப்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

மேலும் 17 பேரை பலியெடுத்த கொரோனா

Rohan

BREAKING NEWS :- நாடு முழுவதும் இன்று மின்வெட்டு l நேரம் குறித்த தகவல் வெளியானது

Rohan

சந்திம ஜீவந்தர வெளியிட்ட முக்கிய தகவல் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy