Tamil news Sri Lanka

இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் பல்கலை மாணவர்கள் அதிரடி கைது


பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு ரசிகர்களின் அனுமதிச் சீட்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மதுபோதையில் வந்த குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தி ஆவேசமாகவும், கலவரமாகவும் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையை கட்டுப்படுத்த முற்பட்ட வேளையில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலைப்பீடத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 3 மாணவர்களும், மாணவி ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



Source link

Related posts

ரயில்களில் இன்று (24) டிக்கட் இன்றி பயணிக்கும் பயணிகள்

Rohan

இந்த ஆண்டு உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? – Trueceylon News (Tamil)

Rohan

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy