எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் இருந்து தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைசோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இன்று முதல் இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டின் மின்சார தேவையினை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.