நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சவாலை வெற்றிகொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பி.பி.சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இதற்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார சவால்களையும் தம்மால் வெற்றிகொள்ள முடிந்திருந்தது. இந்த ஆண்டுதான் எமக்கு மிகவும் சிக்கலானதாகும்.
மக்கள் மூன்று வேளையும் சாப்பிட இடமளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் குரலை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே தமக்கு அவசியமாக உள்ளது என்றும், அவர்களுக்கு மாற்றமே அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.