இலங்கைக்கான பயணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், அடுத்த மாதம் இலங்கையில் இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இலங்கையில் நிலவும் அரசியல் பதற்றம் குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.