2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், நீதி கிடைக்க வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தணைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.