காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குட்டிகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என்றும், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும் கோரி காலி முகத்திடலில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பொலிஸ் அதிகாரியும் அவர்களுடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.