Tamil news Sri Lanka

நாட்டை விட்டு வெளியேறினரா பஷில் ராஜபக்ஸ? – Trueceylon News (Tamil)


முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தள தகவல்களை மேற்கோள்காட்டி லங்கா சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான பஷில் ராஜபக்ஸ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இரத்மலானை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என இலங்கை பத்திரிகை சபையின் தலைவரும், பஷில் ராஜபக்ஸவின் நெருக்கமானவருமான மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

இன்று முதல் கொழும்பில் “Park and ride” திட்டம் அமுல்

Rohan

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் திடீரென மாயம்

Rohan

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைத்தார் ஜனாதிபதி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy