ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று (16) மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து, இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், புதிய அமைச்சரவை அமைப்பது குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)