காலி முகத்திடல் போராட்ட இடத்திற்கு பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளமை குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.
காலி முகத்திடலில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் எதற்காக நிறுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
எனினும், ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.