நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இதற்கு முன்னர் தீர்மானித்ததன் பிரகாரம், மின்சார வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இதன்படி, இரண்டு மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தினங்களிலும் முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதியிலேயே இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்றைய தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கூறுகின்றது. (TrueCeylon)