Tamil news Sri Lanka

15 வயது மாணவனை பலியெடுத்த முதலை – Trueceylon News (Tamil)


கெக்கிராவ – கல்கிரியாகம, மானேருவ பிரதேசத்தில் நீராடச் சென்ற 15 வயது பாடசாலை மாணவன் முதலைக்கு பலியாகிய நிலையில், இன்று (12) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேச மக்களும், கல்கிரியாகம பொலிஸாரும் இணைந்து நேற்று (11) மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனின் காலில் முதலை கடித்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, மாணவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வீர டென்சில் கொப்பேகடுவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்தறையினர் தெரிவித்தனர்.



Source link

Related posts

தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் டொலரின் பெறுமதி

Rohan

நத்தார் தினத்தில் மதுபானசாலை திறக்கப்படுமா? – Trueceylon News (Tamil)

Rohan

மின்சார சபை தலைமை அலுவலகத்தில் அமைதியின்மை – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy