Tamil news Sri Lanka

காலி முகத்திடலில் உயிரிழந்த கலைஞன் (PHOTO) – Trueceylon News (Tamil)


அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

50 வயதாக ரெப் இசை கலைஞரான ஷிராஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில், நேற்றிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு இந்த மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை கலைஞர்கள் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

செயலிழந்தது டயலொக் (DIALOG) – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கை – உரத்தடைக்கு பின்னர் உணவு தட்டுப்பாடு அபாயம் (VIDEO)

Rohan

BREAKING NEWS :- கொலை வழக்கிலிருந்து SLPP பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy