Tamil news Sri Lanka

BREAKING NEWS :- பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமனம்


பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரனே இவ்வாறு பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் புதிய பிரதமர் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டு நாடாளுமன்றில் புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பில் 174 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஷெபாஷ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ வெளியுறவு அமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Source link

Related posts

இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அதிசொகுசு ஜெட் விமானங்கள் (VIDEO)

Rohan

முல்லைத்தீவு ஊடகவியலாளர் தாக்குதல் 3 இராணுவ சிப்பாய்கள் கைது

Rohan

எதிரணிக்கு பதிலடி கொடுத்த அலி சப்ரி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy