யாழ்ப்பாணம் – சத்திர சந்தி பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் சிறுவனும், தாயாரும் பயணித்திருந்த நிலையில், பின்னால் வந்துகொண்டிருந்த பாரவூர்தி மோதியுள்ளது.
இதில், சிறுவன் வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்குண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் தாவடியை சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், பாரவூர்தியின் சாரதியை கைது செய்ததுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.