ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவளிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சியின் உப செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் இதை தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் சுரேன் ராகவன் இதை குறிப்பிட்டுள்ளார்.