தமிழர்களை காப்பாற்ற முயற்சித்தமையினால், தன்னை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததை எண்ணி மனக் கவலை அடைந்து தனது தாய் உயிரிழந்தமையே சோகமான விடயம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
மனோ கணேசனின் முழுமையான பதிவு
அது ஒரு கற்காலம்..!
நண்பர் ஹர்ஷா டி சில்வா நேற்று முதல் நாள் சபையில் ஆற்றிய சிங்கள உரையில் “என்னை பற்றி” குறிப்பிட்ட பகுதி.
கொடும் இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் அடைக்கலமாகி வசிக்க தொடங்கிய வடபுல தமிழ் உடன் பிறப்புகளை வெள்ளை வான் கும்பல் கடத்தி கொலை செய்த காலம்.
இப்படி எத்தனையோ சம்பவங்கள்..! எத்தனையோ பேரை காப்பாற்றினோம். எத்தனையோ பேரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், நாம் போராடாமல் இருந்திருந்தால், இன்னமும் பலநூறு, ஆயிரம் தமிழர்கள் பலியாகி இருப்பார்கள்.
என்னையும் தேடி கொலை செய்ய முயன்றார்கள். ஆனால், அதற்காக நான் ஓடி ஒளியவில்லை. இதனால் என் அம்மா மனக்கவலை அடைந்து மறைந்து போனதுதான் என் சோகம்.
அது ஒரு கற்காலம்..! (TrueCeylon)