பெரும்பாலான கட்சிகள் நிராகரித்த சூழ்நிலையில், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்காகவே தான் சர்வகட்சி மாநாட்டிற்கு சமூகமளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காகவே தாம் வருகைத்தந்ததாகவும் அவர் கூறினார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு கடந்த அரசாங்கமே காரணம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மாநாடு ஆரம்பத்திலேயே குற்றஞ்சுமத்தியதாக கூறிய ரணில் விக்ரமசிங்க, அதற்கு தான் முன்னரே உரிய பதிலை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, குறுக்கிட்டு பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மனம் வேதனைப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தான் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார். (TrueCeylon)