தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் புதிய வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் கோரிக்கைக்கு அமைய, தான் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க இணங்குவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் பட்சத்தில், தான் அதற்கு தயார் எனவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார். (TrueCeylon)