மோசடி குற்றச்சாட்டின் பெயரில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு ரஷ்ய நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த தண்டனை புட்டினின் மிக முக்கியமான உள்நாட்டு எதிரியை பல ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலக்கி வைக்கும்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளியாகக் காணப்பட்ட நவால்னி ஏற்கனவே மாஸ்கோவின் கிழக்கே உள்ள சிறை முகாமில் இரண்டரை வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவருக்கு எதிராக தொடரப்பட்ட சமீபத்திய குற்றவியல் வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார்.
எனினும் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தன்டணை விதிக்கப்பட்டுள்ளது.