Tamil news Sri Lanka

CEYPETCO எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அழுத்தம் வழங்கிய நாடு? – வெளியானது தகவல்


இந்தியாவினால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே, பெற்றோலிய கூட்டுதாபனம் தமது எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த நிலையில், சிபேட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.

IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ற வகையில் சிபேட்கோ நிறுவனத்தின் எரிபொருளின் விலைகளையும் அதிகரிக்குமாறு இந்தியாவினால், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது

இந்தியாவினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டு, இரண்டு தினங்களிலேயே, அதற்கு ஏற்ற வகையில் சிபேட்கோ நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.

IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த நிலையில், IOC நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெருமளவிலானோர் சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே கடந்த இரு தினங்களாக எரிபொருள் நிரப்பி வந்ததை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான நிலையிலேயே, தற்போது சிபேட்கோ நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS :- 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியது – ஏராளமானோர் பலியானதாக தகவல்

Rohan

கொழும்புக்கு படையெடுக்கும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் பொலிஸார்! (புகைப்படங்கள் இணைப்பு)

Rohan

“இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வைத்தியசாலைகளும் மூடப்படும்” அதிர்ச்சி அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy