Tamil news Sri Lanka

மாணவர்களின் பெற்றோருக்கு மற்றுமொரு சுமை? – Trueceylon News (Tamil)


பாடசாலைகளுக்கான நீர் கட்டணத்தை செலுத்துமாறு கோரி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால், அரச பாடசாலைகளுக்கு சுற்று நிரூபமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கான நீர் கட்டணத்தை இதுவரை திறைசேரி செலுத்தி வந்த நிலையிலேயே, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தற்போது பாடசாலைகளுக்கு நீர் கட்டண பட்டியலை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், பாடசாலைகளுக்கான நீர் கட்டணத்தை திறைசேரி செலுத்த தவறியுள்ளதை அடுத்தே, தாம் பாடசாலைகளுக்கு நீர் கட்டணத்தை செலுத்துவதற்கான கோரிக்கையை விடுத்ததாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளிடமிருந்து 40,000 அலகுகளுக்கான நீர் கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதுடன், ஒரு அலகுக்கு 6 ரூபா நிவாரண சலுகையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

பாடசாலை மாணவர்களுக்கு விரயமின்றி நீரை பயன்படுத்தும் வகையிலான பயிற்சிகளை வழங்கும் நோக்குடனும் இந்த திட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பிட்ட சில பாடசாலைகளில் மாத்திரமே கிணற்று நீர் பயன்படுத்தப்படுவதாக கூறிய அவர், பெரும்பாலான பாடசாலைகளில் குழாய் வழியான நீரே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளுக்கு நீர் விநியோக இணைப்பு இலவசமாகவே வழங்கப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு

Rohan

பரீட்சைகள் திணைக்களத்தினால் ஆசிரியர்களுக்கு ஓர் அறிவிப்பு l 20ம் திகதி வரை மாத்திரமே சந்தர்ப்பம்

Rohan

ICTA தலைவர் இராஜினாமா – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy