Tamil news Sri Lanka

தனியார் பஸ் போக்குவரத்து முடங்கும் அபாயத்தில் l எதிர்வு கூறும் பஸ் சங்கங்கள்


டீசல் நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின் அல்லது பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளாவிடின், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தனியார் பஸ் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறுகிய தூர பஸ் சேவைகளை இன்று நடத்தும் சேவையில் ஈடுபடுத்தும் பட்சத்தில், நாளொன்றுக்கு 5,500 ரூபா நட்டம் ஏற்படுவதாக அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்ஜித் தெரிவிக்கின்றார்.

டீசல் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் 80 வீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என தெரிவித்த அவர், 20 வீதமான பஸ்களே சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த பிரச்சினைக்கு தீர்வொன்று வழங்காத பட்சத்தில், தனியார் பஸ் போக்குவரத்து முடங்கும் நிலைமை ஏற்படும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

இதேவேளை, பஸ்களுக்கு பழைய விலையில் எரிபொருள் வழங்கப்படும் பட்சத்தில், ஏனைய எந்த பொருட்களின் விலை அதிகரித்தாலும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

எரிபொருள் புதிய விலையேற்றத்தின் பிரகாரம், 15 வீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறுகின்றார்.

விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்காத பட்சத்தில், நாளைய தினம் முதல் பஸ் சேவையிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

சதொசவில் இன்று (27) முதல் புதிய சலுகை – Trueceylon News (Tamil)

Rohan

BREAKING NEWS:- பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு வெளியானது

Rohan

பரீட்சை சுட்டெண்ணை மறந்த மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy