Tamil news Sri Lanka

இலங்கையின் தென் அரைப்பாகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்


நாளை நாட்டின் தென் அரைப்பாகத்தில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, மேல், தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (TrueCeylon)



Source link

Related posts

“10 மணித்தியாலம் மின்வெட்டு” செய்தி உண்மையா? – Trueceylon News (Tamil)

Rohan

பைசர் l மொடோர்னா தடுப்பூசி இராணுவத்தினால் யாருக்கு செலுத்தப்படும்?

Rohan

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகம் l பிரதமர் விடுத்த அதிரடி உத்தரவு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy