Tamil news Sri Lanka

இன்றிரவு வெளியாகும் பரீட்சை பெறுபேறுகள் − கல்வி அமைச்சர் விடுத்த உத்தரவு


2021ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை  பெறுபேறுகளை இன்றிரவுக்குள் வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

2021ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ம் திகதி நடைபெற்றது.

இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்காக சிங்கள மொழி மூலம் 255,062 பரீட்சார்த்திகளும், தமிழ் மொழி மூலம் 85,446 பரீட்சார்த்திகளுமாக 340,588 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

நாடு முழுவதும் 2943 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைகள் நடைபெற்றதுடன், கொவிட் தொற்றுக்குள்ளானோருக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிந்தன. (TrueCeylon)



Source link

Related posts

கோட்டாவின் மிரிஹான இல்லத்திற்கு சென்ற மஹிந்த மற்றும் நாமல்

Rohan

மீண்டும் திறக்கப்பட உள்ள பாடசாலைகள்! எப்போது தெரியுமா?

Rohan

இலங்கை கபடி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் தமிழகத்திலிருந்து (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy