இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கான வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக இதற்கு முன்னர் அவர் கடமையாற்றியிருந்தார்.
அத்துடன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவே செயற்பட்டு வருகின்றார். (TrueCeylon)
*𝐤𝐢𝐬𝐬𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐛𝐚𝐥𝐥*
Lasith Malinga. IPL. Pink. 💗#RoyalsFamily | #TATAIPL2022 | @ninety9sl pic.twitter.com/p6lS3PtlI3
— Rajasthan Royals (@rajasthanroyals) March 11, 2022