மருந்துப்பொருட்களின் விலையை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளதாகஇராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் புதிய மருந்துப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்வுடன் விற்பனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என நிதியமைச்சின் செயலாளர் இன்று அறிவித்திருந்தார்.