450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 20 ரூபா முதல் 30 ரூபாவிற்குள் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபா முதல் 45 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையிலேயே, பேக்கரி உரிமையாளர்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளில் விலைகளையும் 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று நண்பகல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (TrueCeylon)