இலங்கை மின்சார சட்டத்தின் 43(4) (c) (ii) பிரிவின் கீழ் தேவைப்படும் ஆற்றல் துறையில் அவசர நிலை ஒன்றை அமைச்சரவை பிரகடனப்படுத்தியுள்ளது.
2022ம் ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதி ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, நீண்ட நேர மின்வெட்டை உடனடியாகக் குறைக்கும் வகையில், 6 மாதங்களுக்கு ஏ.சீ.ஈ பவர் (எம்பிலிபிட்டிய) மின் உற்பத்தி நிலையத்திடமிருந்து குறுகிய காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தின் கீழ் 93 மெகா வோர்ட் மின்சார கொள்ளளவிற்கு அனுமதி கோரியுள்ளது. (TrueCeylon)