சமையல் எரிவாயு கொள்வனவிற்கான கொடுப்பனவை செலுத்துவதில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலைமை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவிக்கின்றது.
கடன் பத்திரத்தை வெளியிடுவதில் காணப்பட்ட பிரச்சினை, நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்க்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கெரவலபிட்டி களஞ்சியசாலையிலிருந்து சமையல் எரிவாயு விநியோகம் நேற்றிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)