Tamil news Sri Lanka

கொழும்பில் பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை l நடந்தது என்ன?


மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பெண் ஆசிரியையிடம் விசாரணை நடத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் லொச்சனி அபேவிக்ரம, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் ஆசிரியை, 16 வயது முதல் 20 வயது வரை, குறித்த மாணவனை பாலியல் தேவைகளுக்காக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான ஆசிரியையாக கடமையாற்றும் குறித்த பெண், பாடசாலை வளாகம் மற்றும் கல்கிஸை பகுதியிலுள்ள ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்களில் நான்கு வருடங்களாக மாணவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாடசாலையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் போது குறித்த பெண், இந்த மாணவனை சந்தித்ததாகவும், கல்விப் பணிகளுக்கு உதவுகின்றேன் என்ற போர்வையில் தனது தொலைபேசி இலக்கத்தை மாணவனுக்கு கையளித்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வாட்ஸ்அப் மூலம் சிறுவனுடன் உறவைப் பேணி வந்ததாகவும், 18 வயதை அடையும் வரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் முறையற்ற நடத்தையே காரணம் என பொலிஸில் முறைப்பாடு செய்த குறித்த பெண், பாடசாலையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

உண்மைகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு உட்பட பல வீடுகள் தீக்கிரை

Rohan

திடீரென இலங்கை வந்த இந்தியாவின் விசேட தூதுக்குழுவினர்

Rohan

9 கோடி ரூபாவிற்கு உணவு உட்கொண்ட அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy