புதிய சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கான உடன்படிக்கை ஒன்று இன்று (11) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுதாபனம் ஆகியன இணைந்து, இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
திருகோணமலை − சாம்பூர் பகுதியில் இந்த புதிய சூரிய மின் உற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இலங்கையின் சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனூடாக இலங்கையின் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். (TrueCeylon)