நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட்-19 வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதற்கடுத்ததாக கொவிட்-19 வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ள பிரதேசமாக கொழும்பு மாவட்டம் காணப்படுவதாக தெரிவித்த அவர், கொரோனா தொற்றிலிருந்து திரிபடைந்த ஒமிக்ரோன் வைரஸினாலேயே தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அறிகுறிகள் இல்லாமல் நோயை ஏற்படுத்துதலே ஒமிக்ரோனின் தனித்தன்மையாக கொள்ளப்பட்டாலும் அவ்வாறு அறிகுறிகள் தென்படாவிட்டாலும் தொற்றுக்குள்ளானவருக்கோ அல்லது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ உயிராபத்தும் ஏற்படலாம்.
நாடு வழமை நிலைக்கு திரும்பியதே வைரஸ் பரவல் அதிகரிப்புக்கு காரணமாகும்.
இதேவேளை, வைத்தியசாலைகளில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதமாகவும் ஒட்சிசன் தேவைப்படுவோர் நூற்றுக்கு 08 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமையும் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதற்கான பிரதான காரணமாகவும் கருதப்படுகிறது.
அடிப்படை சுகாதார விதி முறைகளை கடைப்பிடிப்பதை மறந்ததே கோவிட்19 பரவலுக்கு முக்கிய காரணமென்று பலர் கூறுகின்றனர்.
குறிப்பாக திருமண வைபவங்கள் கோவிட்19 பரவுவதை விரைவுபடுத்துவதற்கான முக்கிய இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.