உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரிய சபாநாயகர் பான் பியோன் சேக் நாட்டை வந்தடைந்துள்ளார்.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் தென்கொரிய சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழு நேற்றிரவு (19) நாட்டை வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த தென்கொரிய சபாநாயகரை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் D.Vஷானக்க ஆகியோர் வரவேற்றுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்புக்கு அமைய, தென்கொரிய சபாநாயகர் பான் பியோன் சேக் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தென்கொரிய சபாநாயகர் பான் பியோன் சேக், தனது விஜயத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தென்கொரிய சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
It was an honor to welcome Hon. Park Byeong-Seug Speaker of the National Assembly of the Republic of Korea to #LKA on the invitation of our Hon. Speaker!I am certain this visit will further strengthen the friendship & renew long standing bilateral ties between our two nations. pic.twitter.com/ic4U8Q7b7C
— Namal Rajapaksa (@RajapaksaNamal) January 20, 2022