Tamil news Sri Lanka

கொழும்பில் தீமிதிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட பெண் உயிரிழப்பு


கொழும்பு – ஆமர் வீதி பகுதியிலுள்ள இந்து ஆலயமொன்றில் இடம்பெற்ற தீ மிதிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ம் திகதி இந்த தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்ற நிலையில், 26 வயதான பெண்n ணாருவரும் கலந்துக்கொண்டுள்ளார்.

தீமிதிப்பில், அவருக்கு காயங்கள் ஏற்பட்டதுடன், அவர் தனது வீட்டிலேயே இருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி கடந்த 18ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீமிதிப்பில், குறித்த பெண்ணுக்கு காலில் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என ஆமர்வீதி பொலிஸார் தெரிவித்தனர். (TrueCeylon)



Source link

Related posts

UNP நடத்திய விசேட கூட்டம் l ஆனந்தகுமார் சந்தித்த தலைமைகள் (PHOTOS)

Rohan

எதிர்வரும் சில மணித்தியாலங்களில் புதிய அமைச்சரவை – பிரதீப் உந்துகொட

Rohan

மனிதர்களை உணவாக உட்கொள்ளும் ஆபத்தான மீன் இனம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது!!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy