Tamil news Sri Lanka

அரச ஊழியர்களுக்காக வெளியிடப்பட்ட மற்றுமொரு வர்த்தமானி


அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 65 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதை 65 ஆக அதிகரித்து, இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

இன்று (10) முதல் வழமைக்கு திரும்பும் கல்வி – Trueceylon News (Tamil)

Rohan

முச்சக்கரவண்டிகளுக்கு கட்டாயப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் – Trueceylon News (Tamil)

Rohan

மதுபான விற்பனை குறித்து மதுவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy