கொழும்பு – வெள்ளவத்தை கடலில், முதலையொன்று நீந்தி செல்வதை இன்றைய தினம் (19) அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த முதலையின் நடமாட்டம் காரணமாக, குறித்த பகுதியிலுள்ள மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கொழும்பு – காலி முகத்திடல் கடலில் கடந்த 9ம் திகதி முதலையொன்றின் நடமாட்டத்தை அவதானிக்க முடிந்தது.
மேலும், தெஹிவளை கடலில் கடந்த 3ம் திகதி முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகள் முன்னெடுத்த போதிலும், இன்று வரை அந்த முதலையை பிடிப்பதற்கான இயலுமை கிட்டவில்லை.
இவ்வாறான நிலையிலேயே, வெள்ளவத்தை கடலில் இன்றைய தினம் முதலையொன்றின் நடமாட்டம் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.