பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓய்வூப் பெற்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்;.
இந்த சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டி – பனாமுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக வெளியான தகவல்களின் பிரகாரம், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஓய்வூப் பெற்ற வைத்தியரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில், அவரது வீட்டிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர், இரண்டு வாள்கள், ரம்போ ரக கத்தியொன்று மற்றும் அடையாளம் காண முடியாத துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்ட ஆயுதங்களில் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வைத்தியரிடம், பாதுகாப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)