தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆண்டு 6 மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 38 மிருகங்கள் இறந்துள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷர்மிலா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்;.
இந்த மிருகக்காட்சிசாலையில் 4,800 மிருகங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த காலப் பகுதியில் மாத்திரம் 93 மிருகங்கள் பிறந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 6 மாத காலப் பகுதியில் பிறந்த மிருகங்கள்
- பாலூட்டி மிருகங்கள் :- 31
- பறவைகள் :- 40
- ஊர்வன :- 22
இறந்த மிருகங்கள் தொடர்பான விபரங்கள்
- பாலூட்டிகள் :- 18
- பறவைகள் :- 17
- ஊர்வன :- 03