ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையை வழங்க சீனா, இலங்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரிசி தொகையானது, எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இறப்பர் – அரிசி உடன்படிக்கைக்கு 70 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, சீன அரசாங்கத்தினால் இந்த அரிசி நன்கொடை வழங்கப்படவுள்ளது. (TrueCeylon)