களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின், மின் உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
மின் பிறப்பாக்கிகளுக்கு தேவையான எரிபொருள் இல்லாமையை அடுத்தே, மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
எனினும், இன்றைய தினம் மின் விநியோக தடை ஏற்படுத்தப்படாது என மின்சார சபை நம்பிக்கை வெளியிடுகின்றது.
இந்த நிலையில், மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலிய கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)